19 Apr 2015

கெனடி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழா.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 57 வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு  களுதாவளை கிராம பொது மக்களின் ஆதரவுடனான விளையாட்டு விழா சித்திரை வருடப்பிறப்பன்று அதாவது செவ்வாய்க் கிழமை (14) மாலை களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.கோகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், மற்றும். சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், உட்பட பல உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தலையணைச்சமர், முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், போன்ற பல கிராமிய, சமூக மட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதோடு, விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.








SHARE

Author: verified_user

0 Comments: