கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை எமது மக்களுக்கு தெரிவிப்பதற்காக வேண்டி தற்போது நான் புது முயற்சி எடுத்துள்ளேன். நான் எழுதுவதை யாரும் படிப்பதில்லை மாறாக அதனைப் படிப்பவர்கள் யாரும் அதுபற்றிக் குற்றம் சொன்னதும் இல்லை, குற்றம் சொல்பவர்கள் யாரும் படிப்பதில்லை.
என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கிராமத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டம் சனிக்கிழமை (18) இரவு 8 மணியளவில் தட்சணாமூர்தி கமலநாதனின் வீட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
தற்போது எமது தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களைக் கொடுத்து மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கைகளை பலர் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் திக்கித்திணறிக் கொண்டுள்ளனர். எனவே மக்களைத் தெழிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
இந்த நாட்டிலே ஒருவர் 5 வருடங்கள் வாழ்ந்தால் அவர் இந்த நாட்டுப்பிரஜாவுரிமை பெற்றவராவார். இந்த சட்டத்தைக் கொண்டு வந்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம்தான் இது எமது மக்களுக்குத் தெரியாது.
ஜி.ஜி.பொன்னம்பலத்தையும், தந்தை செல்வநாயகத்தையும் முதன் முதல் சந்தித்த அரசியல்வாதி நான்தான். இந்த தமிழ் அரசியல் பழம் தலைவர்கள் இருவரும் கடந்த காலத்தில் ஒன்றாக இருந்து எமது மக்களுக்காகக் குரல் கொடுத்திருந்தும், பின்னர் பிரிந்து செயற்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்து செயற்பட்ட வரலாறு இந்த மண்ணில் உள்ளது.
1972 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இரா.சம்மந்தன் பற்கேற்றிருந்தும் அவர் எந்தக் கட்சி சார்பாகவும் எதுவித பதவிகளையும், வகிக்கவில்லை. அன்றதினம் நடைபெற்ற கூடத்திலேயே தந்தை செல்வா தலைமையில் உருவாக்கப் பட்டதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழருடைய கட்சி என்ற நோக்கததுடன் செயற்பட்டவர்தான் தந்த செல்வா. 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சி இனிமேல் இயங்காது, என்ற கோசத்துடனும், தமிழரசுக் கட்சியை மேலேங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கனவிலும்கூட நினைக்காமல் தந்தை செல்வா செயற்பட்டு வந்தார்.
1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தழிழர் விடுதலைக் கூட்டணியே தவிர தமிழரசுக் கட்சிய அல்ல தந்தை செல்வா இறக்க முன்னர் ஜி.ஜி.பொன்னம்பலத்தையும், தொண்டமானையும் கொணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக்கிவிட்டுத்தான் இனிமேல் தமிழர்களின் தலைவர்கள் இவர்கள்தான் என அறிமுகமாக்கிவிட்டுத்தான் இறந்தார்.
தந்த செல்வாவின் பிரேதமும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் கொடி போர்த்தித்தான் எரிக்கப்பட்டது. இவைகளனைத்தும் வரலாற்றுச் சான்றாகும். இதனை எமது மக்கள் நன்கு அறிந்துகௌ;ள வேண்டும்.
தந்தை செவ்வா இறந்து 26 வருடங்களுக்குப் பின்னர் மாவை. சேனாதிராசா மட்டக்களப்பிலே மட்டக்களப்பு மக்களை முட்டாளாக்கிவிட்டு மட்டக்களப்பிலே தமிழரசுக் கட்சியினை மீண்டும் உருவாக்கினார்.
இவை ஒரு புறமிருக்க மட்டக்கள்பபிலே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன், ஆகியோர் 2003 ஆம் ஆண்டு வரைக்கும் எப்போதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் விகத்துள்ளார்களா? இல்லவே இல்லை 2003 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவ்வாறு அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்திருந்தால் அதனை அவர்கள் நிருபித்துக் கட்டட்டும் அதற்கு நான் சவால் விடுகின்றேன். இவர்கள் அனைவரும் 2010 ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாகாநாட்டிலேதான் அக்கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்கள் இதுதான் உண்மை.
எனவே மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசனம் எவ்வாறு கிடைத்தது என்பதை நன்கு உணர வேண்டும். அவர்கள் அவர்களைப் பற்றி சிந்தித்த பின்பே மற்றவர்களைப்பற்றிக் கதைக்க வேண்டும். எனவே தற்போது தமிழரசுக்கட்சி என கூறிக் கொண்டு செயற்படும் அனைத்து அரசியல்வாதிகளும் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலே இருந்து செயற்பட்டவர்கள்தான் இதனை யாரும் மறுக்க முடியாது.
எமது மக்களுக்காக இதுவரையில் தமிழரசுக் கட்சியில் இருந்து யாரும் உயிர் நீக்கவில்லை, ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்துதான் நீலம் திருச்செல்வம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவபாலன், போன்ற தலைவர்கள் இறந்துள்ளார்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் தான் ஆயுதப்போராட்டம், சாத்வீகப் போராட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டன. மாறாக இலங்கைத் தமிழரசுக் அகட்சியிக் காலத்தில் இவை எதுவும் நடக்கவில்லை இதனை எமது மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன் இதற்கு யாரும் சவால்விட்டால் அதனைத் எதிர் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். என அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment