நாங்கள் இந்த அரசாங்கத்துடன் முழுமையாக சேரவில்லை நாங்கள் கேட்டதை இந்த அரசாங்கம் முழுமையாகத் தரவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 49 வது வருடாந்த விளையாட்டு விழா களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
நாங்கள் 65 வருடங்களாக தமிழ் மக்களுக்குரிய தீர்வை நேங்கிய பயணத்தில் வழுக்குமரத்தில் ஏறுவது போன்ற நிலையில் ஏறுவதும் இறங்குவதுமான நிலையில் காணப்படுகின்றோம். நாங்கள் இந்த தீர்வினை எப்போது அடைவோம் என்பதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எங்களது இலக்கினை அடையும்வரை நாங்கள் ஏறிக்கொண்டுதான் இருப்போம், அதற்காக பாலதரப்பட்ட கஸ்ரங்களுக்குள்ளாகியிருக்கின்றோம். இதற்கான போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் நாங்கள் ஆகுதியாக்கி இருக்கின்றோம். விடுதலைப் போராட்டத்தின்போது மூன்று இனமக்களும் இந்த மண்ணிலே இறந்துள்ளார்கள் எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு நான் கூறுவது யாதெனில் இலட்சக்கணக்கான மக்களை இழந்த இனம் என்றால் எமது தமிழினம் மாத்திரந்தான் ஆயிரக்கணக்கான உயிரினை இழந்தவர்கள் சிங்களவர்கள் நூற்றுக்கணக்கான உயிரினை இழந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆவார். எனவே விடுதலைப் போராட்டத்தில் பாரிய உயிர்ச்சேதத்தினை சந்தித்தவர்கள் தமிழர்கள்தான் இவ்வாறான இழப்பினூடாகத்தான் தற்போது அரசியலை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம்.
தற்பொழுது ஒரு ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது இந்த அட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளது. இதனால் எதனையும் சாதிக்க முடிந்துள்ளதா? எனக் கேள்வியெழுப்புகின்றனர். நாங்கள் இந்த அரசாங்கத்துடன் முழுமையாக சேரவில்லை நாங்கள் கேட்டதை இந்த அரசாங்கம் முழுமையாகத் தரவும் இல்லை, நாங்கள் இந்த ஆட்சியை மாற்றியுள்ளோம் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் இதற்காக நாங்கள் கேட்ட விடயங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய விடயங்களையே! எங்களுக்கு இந்த அரசாங்கம் செய்துள்ளது.
நாங்கள் குறைந்த பட்சம் கேட்டிருந்தோம் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் என்று அவற்றையும் இன்னமும் விடுதலை செய்யவில்லை அவர்கள் செய்ததாக கூறுவது யாதெனில் வட மாகாணத்திலே இருக்கக்கூடிய 540 ஏக்கர் நிலத்தினை விடுவிப்பதாக இந்த அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதனை மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதே போன்றுதான் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் அடாவடித்தனமாக மேச்சல்தரைக்காக பிடிக்கப்பட்ட காணிகளை தற்பொழுது பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலினை எமது கட்சி தலைவர் ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்க இருக்கின்றோம்.
இவ்வாறான சில விடயங்கள் நடந்தாலும் கூட இந்த அரசாங்கத்திடம் ஏனைய விடயங்களில் நம்பிக்கைக் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் இதனை அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை தமிழ் மக்கள் ஒன்றைமட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இலக்கை எட்டும் வரைக்கும் நாங்கள் நாங்களாகத்தான் இருக்க வேண்டும் இதற்காக தொடர்சியாக எமது அரசியல் பலத்தினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment