திருப்பழுகாம மண்ணில் பல வருடங்களாக பல சேவைகளைப் புரிந்து வரும் பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் படுவானிலே மிளிர்ந்து கொண்டிருக்கும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் பிரமாண்டமான சித்திரை கலாசார விளையாட்டுப் போட்டியும் பாராட்டு விழாவும் எதிர்வரும் 17.18-04-2015 அன்று இடம்பெற உள்ளது. இவ்விழாவிற்கு ஐக்கிய இராச்சிய பழுகாமப் பரம்பரை ஒன்றியம் அனுசரணையில் இடம்பெற உள்ளது.
இவ்விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அம்மணி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
17.04.2015 அன்று காலை 7.00 மணிக்கு சைக்கிள் ஓட்டப்போட்டியும் தோணி ஓட்டமும் இடம்பெற உள்ளது.
18.04.2015 அன்று காலை 7.00மணிக்கு மரதன் ஓட்டம் இடம்பெற உள்ளது. பிற்பகல் 2.00 மணியளவில் கலாசார விளையாட்டு விழா இடம்பெற உள்ளது.

1 Comments:
SSSC & PAPA
Post a Comment