29 Apr 2015

சிவராமின் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பைச் சேர்ந்த சேர்ந்த மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி டி.சிவராமின் 10 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் கிழமை (29) மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அருள்.சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரகேசரி குழுமத்தின் அலோசகர் வி.தேவராஜ், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனிபா, மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், உட்பட பலர் நினைவுரைகளை ஆற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், இ.பிரசன்னா, இராஜேஸ்வரன் உட்பட வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


































SHARE

Author: verified_user

0 Comments: