25 Mar 2015

ஒரு நாட்டுக்குள் பிரச்சினையை தூண்டி விடுபவர்களாக தலைவர்கள் இருக்கக் கூடாது

SHARE
ஒரு நாட்டுக்குள் பிரச்சினையை தூண்டி விட்டு இந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பதத்தினை வைத்து எமது மக்களுக்கு எதிரான காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது நாங்கள் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.  என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

திங்கட் கிழமை (23) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பட்டிருப்பு தொகுதியின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த நாட்டில் தமிழ் இனத்துக்கு பெருமை தேடித்தந்தவர் எமது மதிப்புக்குரிய தம்பி பிரபாகரன். இவர் எமது இனமானது புகழ் ஒங்குவதற்கு பாடுபட்டவர் மாத்திரமின்றி  தமிழினத்தின் வீரத்தினை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் என்பதனை நாங்கள் எவரும்  மறக்கவோ மறைக்கவோ முடியாது.

இலங்கையில் எமது இளைஞர்கள் வகை தொகையின்றி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதம் என்ற போர்வையில் தற்போதும், கைது செய்யப்படுகின்றனர். பயங்கரவாத்தில் ஈடுபட்ட தயாமஸ்ரர், கே.பி, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரன், மற்றும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஆகியோர் மிகவும் பலத்த பாதுகாப்புடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்திருக்க இவர்களுக்கு சோறு கொடுத்தவர்கள், கறி கொடுதவர்கள் மற்றும் இவர்களால் பலவந்தமாக பிடித்து போராட்டத்தில் இணைந்த இளைஞர்கள் இன்று சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் என்பது தமிழ் மக்களிற்கு சாதகமான நிலையினை தோற்றுவிக்கும் என்பதனை நாங்கள் எதிர்பார்க்க வில்லை மாறாக முன்பிருந்த அராஜக ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும் என்பதனையே நாங்கள் எதிர்பார்த்தோம். இருந்தாலும் இந்த அட்சிமாற்றத்தினை ஏற்படுத்திய தமிழ் மக்களாகிய எமக்கு இந்த அரசாங்கம் பல கைங்கரியங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. என்பதனை உணர வேண்டும்.
இவ்வாறு உணர்ந்து செயற்படுவதன் ஊடாகவே இந்த அரசாட்சியை நல்லாட்சி என்று நாங்கள் எற்றுக் கொள்ள முடியும் அவ்வாறு செயற்படாத பட்சத்தில் இந்த அரசாங்கம் கூறும் நல்லாட்சி என்ற பதத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். என்பதனை இந்த அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து நல்லாட்சி என்ற பெயரைவைத்துக் கொண்டு தமிழருக்கு நாங்கள் நல்லதை செய்யப் போகின்றோம் என்று கூறி எம்மையும் எமது பிரச்சினைக்குரிய தீர்வின்பால் முன்னெடுத்துச் செல்லும் சர்வதேசத்தின் முயற்சிகளை சீர்குலைக்கவோ, அல்லது மட்டுப்படுத்துவதற்கோ   இந்த நல்லாட்சி என்ற பதத்தினை பயன்படுத்தலாம் என்று இந்த அரசாங்கம் எள்ளளவும் நினைக்கக் கூடாது.
இந்த நல்லாட்சி என்ற பெயரை வைத்து தமிழருக்கு எதிரான காய் நகர்த்தல்களை மேற்கொள்வதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக் கமாட்டோம் இந்த விடயங்கள் அனைத்தையும் நாங்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கின்றார்கள் எனவே எம்மை ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவது இந்த அரசாங்கம்தான் என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் நினைக்கின்றோம்.

ஏன் நான் இதனை கூறுகின்றேன் என்றால் நான் இலங்கையன் என்ற வகையிலையே இதனை நான் கூறுகின்றேன். அண்மையில் இருக்கின்ற இந்தியா நாட்டினை எடுத்துக் கொண்டால் அந்த நாட்டிலே பல மொழி, பல மதம், பல சாதியினை உடையவர்கள் வாழ்கின்றனர். ஆனால் அங்கு வாழிகின்ற மக்கள் அனைவரும் ஒரே எண்ணத்தடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதாவது நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அவ்வாறு இருக்கும் போது ஏன் எமது நாட்டில் இன, மத, மொழி, வேறுபாட்டுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறன வேறுபாட்டை உருவாக்கியவர்கள் யார், இவ்வாறான வேறுபாடு தொடர்ந்து சென்று கொண்டிருந்தால் இந்த நாட்டின் இறுதி நிலை என்னவாகும் என்பதனை சித்திக்க வேண்டும். நான் ஒன்றைக் கூறுகின்றேன் இந்தநாட்டில் இவ்வாறான நிலையினை உருவாக்கியவர்கள் அரசியல் தலைவர்கள் தான் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

எனவேதான் இந்த நாடடில் அனைத்து இன மக்களும் சம அந்தஸ்துடன்  வாழ வேண்டும் மாறாக இனத்திற்கிடையில் ஒரு நாட்டுக்குள் பிரச்சினையை தூண்டி விடுபவர்களாக தலைவர்கள் இருக்கக் கூடாது அவ்வாறான வேலைகளினால் எமது நாட்டு மக்களும் நாடும்தான் பாதிக்கப்படும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும், இணைந்து இந்த நாட்டுக்குள் எமது இனமும் சம அந்தஸ்துடன் வாழக் கூடிய தீர்வினை தங்களது காலத்தில் பெற்றுத்தருவதன் மூலம் வரலாற்றில் தடம்பதித்த தலைவராக திகழ்வீர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை இல்லாத விடத்து எங்களது பணி அன்றுபோல் என்றும் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனத் தெரிவித்தார்.
ர்களாக தலைவர்கள் இருக்கக் கூடாது
SHARE

Author: verified_user

0 Comments: