தற்போது எமது நாட்டிலிருந்து சுமார் 18 லெட்சம் மக்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளிலே வசித்து வருகின்றார்கள். அங்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது தமிழ் பெண்கள் வெளிநாடுகளிலும் பல துறைசார்ந்த நிபுணர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உலா உயர் பதவிநிலைகளில் சாதனை படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
சருவதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்பிரதேச மட்டத்தில் சமூக சேவையில் திகழும் பெண்களைக் கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (24) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தன்நலம் கருதாது சமூகசேiவையில் ஈடுபட்டுவரும் 6 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
மதங்கள் ரீதியாகப் பார்க்கின்றபோது ரீதியாக பெண்களுக்கு அதிகளவு முன்னுரிமை கொடுத்தது இந்து மதம்தான் ஏனெனில் கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றிற்குரிய தெய்வங்களும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கின்றன.
அதுபோன்று உலகத்திலே உள்ள 3200 இற்கு மேற்பட்ட மொழிகளிலே தமிழ் மொழிதான் பெண்களுக்கு அதிக அந்தஸ்த்ததை வழங்கியுள்ளது. ஆனால் வார்த்தையில் பெண்களை மத்திக்கின்ற தன்மை குறைவாகத்தான் இருக்கின்றன. எனவே தமிழ் மொழியோ அல்லது சமயங்களோ பெண்களை வேறாக்கவில்லை மனிதர்கள்தான் பெண்களை வேறாக்கியுள்ளார்கள்.
கடந்த கால வரலாறுகளைப் பரட்டிப்பார்க்கின்ற போதும் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்து, சமத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே சமத்துவம் எனறு கூறுபவர்கள் அவர்கள் சமத்துவமாக நடந்து கொள்கின்றார்களா? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் அதிகளவு பெண் உயர் அதிகாரிகள் உள்ளார்கள், இவற்றினைவிட அதிகளவு பெண் உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றார்கள். எனவே பொண்கள் தொழில் சார்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றார்கள், சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருந்தும் ஆணடிமைத்தனத்திலிருந்து விடுபட வில்லை என்ற கருத்து உள்ளது. இக்கருத்தானது தற்போது மெல்ல, மெல்ல மாறிவருகின்றது. இவ்வாறு பெண் விடுதலைக்கு வித்திட்டது எமது ஈழ மண்ணாகும்.
கடந்த கால வரலாற்றில் எமது தமிழ் பெண்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகலும் கடந்த காலத்தில் சாதனை படைத்துள்ளார்கள். இந்தியப்படையினருக்கு எதிராக கடந்த காலத்தில் முதலாவது தாக்குதல் நடாத்தியவர்கள் எமது தமிழ் பெண்கள்தான். எனவே பெண்களின் விடுதலை, பெண்களின் சமத்துவம் என்பன இன்றும் எமது தமிழ் மண்ணில் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
தற்போது எமது நாட்டிலிருந்து சுமார் 18 லெட்சம் மக்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளிலே வசித்து வருகின்றார்கள். அங்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது தமிழ் பெண்கள் வெளிநாடுகளிலும் பல துறைசார்ந்த நிபுணர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உhல உயர் பதவிநிலைகளில் சாதனை படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் இலங்கை பெண்ணிற்கான சிறந்த நாடு இல்லை ஏனெனில் தற்போதைய ககாலகட்டத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமுடியாத நாடாகத்தான் இலங்கை நாடு உள்ளது. எனவே பெண் விடுதலை என்பது வெறுமனே சுலோகங்களினாலும். உதடுகளினால் மட்டும் இருந்துவிட்டால் போதாது உள்ளத்தினால் பெண்களுக்கான கூதந்திரம் வழங்கப்படல் வேண்டும்.
இசைப்பிரியாவை துடிதுடிக்க கொன்ற நாடு, சின்னம் சிறிய சிறுமி விபூரிக்காவை சிறையில் அடைந்த நாடுதான் இந்த இலங்கை நாடு.
கடந்த இறுத்திப் போராட்டத்தில் 145000 பேர் இறந்திருக்கின்றார்கள் அவற்றில் 55 வீதமானவர்கள் பெண்கள். இதுதானா? பெண்களிற்கான சிறந்த நாடு?
பெண்களுக்கான சிறந்த நாடு வேண்டுமாக இருந்தால் தமிழ் மதக்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் பெண்களிற்கான சிறந்த நாடு உதயமாகும்.
தொலைக்காட்சி நாடகங்களிலே பெண்கள் வில்லிகளாகவும், சண்டை செய்பவர்களாகவும், சித்தரிக்கப் படுகின்றமையானது, எமது மக்கள் மத்தியிலேNயும், தற்கொலைகளுக்கும், ஏனையவர்களைத் தாக்குகின்ற தன்மைகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இவ்வாறான நிலமைகளிலிருந்து எமது மக்கள் விடுபட வேண்டும்.
கடந்த போராட்ட காலத்திற்குப் பின்னர் போதை வஸ்த்துக்கள் பாவனை கூடிய மாவட்டம் யாழ் மாவட்டமும், மதுபாவனையில் கூடிய மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டமுமாகக் காணப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு எமது பெண்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment