25 Mar 2015

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைப்பத? இல்லையா? என்ற கருத்து இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

SHARE
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைப்பத? இல்லையா? என்ற கருத்து இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. கலைக்க வேண்டும் என்று ஜக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தினை கலைக்கக் கூடாது என்று இன்னோர் கட்சியும் போட்டி போட்டுக் கொன்று இருக்கின்றது. என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கையை தெளிவுபடுத்தும்   கூட்டம் களுவாஞ்சிகுடி இரசாமாணிக்கம் மண்டபத்தில் இடம் பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைப்பத? இல்லையா? என்ற கருத்து இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. கலைக்க வேண்டும் என்று ஜக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தினை கலைக்கக் கூடாது என்று இன்னோர் கட்சியும் போட்டி போட்டுக் கொன்று இருக்கின்றது. மறுபக்கம் தொகுதிவாரி தேர்தல் நடாத்துவதா? அல்லது விகிதாசார தேர்தல் நடாத்துவதா? என்று வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றது.

அடுத்தபடியாக பார்த்தால் 19 வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என்றெல்லாம் பல்வேறு பட்ட தொல்லைகளுக்கு மத்தியில் அரசாங்கம் இக்கட்டான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. இந்த வகையில் நூறு நாள்வேலைத் திட்டத்தில் தமிழருக்கு என்ன கிடைத்திருக்கின்றுது என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு இருக்கின்றது.

அதாவது இரண்டு மாகாணங்களிலே இராணுவ அதிகாரியாக இருந்த ஆளுனர் இருவர் ஆள்மாற்றப்பட்டுள்ளனர், மற்றயது வடக்கில் அரச அதிபர்களின் இட மாற்றம் இடம் பெற்றிருக்கின்றது. மற்றும் காணிகளை விடுவிப்பதாக கூறியிருக்கின்றனர், மற்றும் சிறைக் கைதிகளை விடுவிப்பதாகவும் கூறியிருக்கின்றனர், கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களை மீழக் குடியமர்த்துவதாக கூறியிருந்தனர், தற்போது யோசிக்கின்றனர் அங்கு குடியமர்த்துவதா? அல்லது வேறு இடத்தில் குடியமர்த்துவதா? என்று சிந்தித்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான சூழல்தான் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய அரசினால் தமிழ் மக்கள் சார்பாக பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.

தற்போதைய இந் நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் வருகையினால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த பிரதமர் ஜனாதிபதியுடன் பேசும் போது 13 பிளஸ் சம்மந்தமாக பேசியிருக்கின்றார் என அறிகின்றோம். இவையொல்லாம் நாங்கள் முன்பறிந்த விடயங்கள்தான் ஏற்கனவே இருந்த ஜனாதிபதி கூட எங்களுக்கு 13 க்கு மேலே தருதாக கூறியிருந்தார்.  பதின்மூன்றோ அல்லது அதற்கு மேலையோ எமது கைக்கு வந்தால்தான் உண்மை. பாராளுமன்றத்தில் பாரதப்பிரதமர் உரையாற்றும் போது இந்தியாவிலே மானிலத்தில் அதிகாரங்களை வழங்கி தற்போது சிறந்த ஆட்சி இடம் பெற்று இருப்பதாக கூறியிருந்தார். இருந்தும் இலங்கையை சிங்களத் தீவு எனக் கூறிவிட்டார் இது எமக்கு மனவேதனையை ஊட்டுகின்றது.

இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வைத்து என்ன இடம் பெற போகின்றது என்பதனை எமது மக்களுக்கு சரியாக கூறமுடியாத நிலையில் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம்.  தற்போது இந் நிலையில் முதலில் அரசாங்கத்தில் கட்சிகளுக்கிடையில் ஒரு சுமூகமான நிலவரம் வேண்டும் அப்போது தான் நாங்கள் எதனையும் சரியாக கூறமடியும். அது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஆட்சி அமைத்த பின்னரா? அல்லது அதற்கு முன்னர் சுமூகமான நிலை உருவாகுமா? என்பதனை சரியாக கூறமுடியாதுள்ளது. எனவே அனைத்தையும் நாங்கள் பொறுமைகாத்து அவதானித்துக் கொண்டு  இருக்கின்றோம்.

எனவே தற்போதைய ஆட்சிமாற்றத்தினால் நாங்கள் இவ்வாறானதோர் நிலையில் தான் நாங்கள் நின்று கொண்டு  தான் எமது அரசியல் செயற்பாடுகளை மக்களுக்காக முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக எமது மக்கள் எங்களுடன் துணைநிற்கின்றனர் இதனை எமது மக்கள் தொடர்சியாக செய்கின்றபோதுதான் நாங்கள் மக்களால் எமக்கு கிடைத்த ஆணையை வைத்துக் கொண்டு எமது அரசியலை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: