இந்த உலகத்திலே கோடிக்கணக்கானோர் வாழ்கிறார்கள். அவர்களிலே பெருமளவானோர் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கையில் மிகச் சிலர் மட்டும் பிறருக்காகவும் வாழ்ந்து வருகின்றார்கள். பிறருக்காகவும் வாழுகின்றவர்கள் எதனையும் யாரிடத்திலிருந்தும்; எதிர்பார்ப்பதில்லை. தூற்றுவோர் தூற்றினாலும் அதற்கு அவர்கள் செவி கொடுப்பதுமில்லை. அல்லல்படுவோர்க்கு உதவுவதே அவர்களது நோக்கு. அத்தகைய நோக்கை உடையவர்கள்தான் உண்மையான தொண்டர்கள்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிக் கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் வேணுஷா பிரஷாந் தலைமையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் இடம் பெற்ற தகுதி பெற்ற செஞ்சிலுவை தொண்டர்களுக்கான முதலுதவிச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைக் கிளையின் தலைவர் த. வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில் செஞ்சிலுவைத் தொண்டர்களாகிய உங்களதும் உங்களைப் போன்றவர்களதும் விலை மதிப்பற்ற சேவையை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒரு போதும் மறந்து போகாது. பொருத்தமான சந்தர்ப்பங்களில் தொண்டர்களின் மகத்தான சேவையை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மீட்டுப்பார்ப்பதுண்டு.; தகுதி பெற்ற தொண்டர்களுக்கான முதலுதவிச் சான்றிதழ் வழங்குகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்திலே ஒரு சம்பவத்தை மட்டும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை நினைவு படுத்த விரும்புகின்றது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்தாம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாந்தேதி மட்டக்களப்பு மாவட்டத்திலே புதுக்குயியிருப்பு கிராமத்திலே விடுதலைப் புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடந்ததை யாவரும் நினைவில் வைத்திருப்பீர்கள். அவ் வேளையிலே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை நாட்டுப்படைகளுக்கும் இடையே நடந்த சண்டையிலே பஸ்ஸில் பிரயாணம் செய்து சொண்டிருந்த ஏறக்குறைய நாற்பது அப்பாவிப் பொது மக்கள் கிரான்குளத்து பிரதான வீதியிலே அகப்பட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற நிலை தெரியாத மிகவும் பதட்டமானதும் அச்சம் நிறைந்ததுமான சூழல். யாரும் எட்டிக்கூட பார்க்க முடியாத நிலமை. கல்முனை – மட்டக்களப்பு வீதி வெறிச்சோடிப் போய்விட்டது. தற்கொலைத் தாக்குதல் நடந்த புதுக்குடியிருப்பைத் தாண்டி யாரும் போகவும் வரவும் முடியாத நிலமை.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டன. பஸ்ஸில் பிரயாணம் செய்து அங்கு அகப்பட்டவர்களின் உறவினர்கள் நிம்மதியிழந்து கதறியழுதார்கள். யாரும் முன்வரத் துணியாத அந்த நேரத்தில் செஞ்சிலுவைத் தொண்டர்கள் துணிந்து புறப்பட்டார்கள். வீதியிலும் சம்பவம் நடந்த இடத்திலும் அச்சுறத்தல்கள் பலவற்றை சந்தித்த போதினும் யாவற்றையும் புத்திசாலித்தனமாக எதிர் கொண்டு அங்கு சென்ற போது அங்கு பொது மக்களின் சடலங்களைத்தான் அவர்களால் காணமுடிந்தது. கடுமையான பிரயத்தனத்தின் மத்தியிலே தங்களால் மீட்கக்கூடிய முப்பது அல்லது முப்பத்தைந்து சடலங்களை மட்டக்களப்பு அரசினர் வைத்திய சாலையிலே அவர்கள் ஒப்படைத்தார்கள்.
இது ஒரு நினைவுதான் இப்படி பல நினைவுகளை நம்மால் மீட்டுப்பார்க்க முடியும். இனமுறுகல் காலத்திலே அடிக்கடி நடந்த செல்வீச்சுகளின் போதும் துப்பாக்கி வெடிகளின் போதும் காயமுற்ற எத்தனையோ குடிமக்களை வீண் இறப்புக்களிலிருந்து காப்பாற்றியவர்கள் நீங்களும் உங்களுக்கு முன்னே செயற்பட்ட தொண்டர்களும் ஆவர். அவர்களதும் உங்களதும் சேவையை மறக்க முடியாது. உங்களதும் அவர்களதும் சேவை அளப்பெரியது, விலைமதிப்பற்றது என்றார்.
இந்நிகழ்வில் விசேட அழைப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் கே. விவேகானந்தநாதன் இரத்ததானம் வழங்குவதற்கு மாவட்ட மக்கள் முன்வரல் வேண்டும். அதற்கு செஞ்சிலுவைத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் மாவட்ட முதலுதவி இணைப்பாளருமான சீனித்தம்பி கஜேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தகுதி பெற்ற செஞ்சிலுவைத் தொண்டர்களுக்கான இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் பொருளாளரும் போரதீவுப் பற்று செஞ்சிலுவைப் பிரிவின் தலைவருமான வ. சக்திவேல், மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினரும் மண்முனைப்பற்று செஞ்சிலுவைப் பிரிவின் தலைவருமான க. நவநாதன் மற்றும் சிரேஷ்ட முதலுதவிப்பயிற்றுனரும் செயற்குழு உறுப்பினருமான ஆ.சோமசுந்தரம் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments:
Post a Comment