உலகக் கிண்ண ஏ
பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் நேற்று (08)
சிட்னியில் மோதின. இப்போட்டியில் வெற்றிக்கான தூரத்தினை நோக்கி இலங்கையணி
இறுதிவரை பயணித்த போதும் அவுஸ்திரேலியாவிடம் 67 ஓட்ட வித்தியாசத்தில்
தோல்வியைத் தழுவியது.
377 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய
இலங்கை அணி, 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312
ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால், உலகக் கிண்ண
கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்து புதிய சாதனை
படைத்த சங்ககாராவின் முயற்சி வீண் ஆனது.
இப்போட்டியில் அவர் 107 பந்துகளில் 104 ஓட்டங்களை குவித்தார். டில்சான் 62 ஓட்டங்களையும், சந்திமால் அதிரடியாக 52 ஓட்டங்களையும் சேர்த்தனர். மெத்யூஸ் 35 ஓட்டங்களையும், ஜயவர்த்தன 19 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலிய தரப்பில் பவுல்க்னர் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஜோன்சன் தலா 2 விக்கெட்டுகளையும், வொட்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 Comments:
Post a Comment