மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் சிவநெறிக் கலாமன்றம் நடாத்தும் அறநெறிக் கலை விழா நாளை மறுதினம் திங்கட் கிழமை (23) மாலை 4 மணிக்கு மட்.குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மட்டபத்தில் நடைபெறவுள்ளதாக சிவநெறிக் கலாமன்றத்தின் தலைவர் வ.குணசேகரம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு, நடனம், குழப்பாடல், போன்ற வற்றோடு பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வியமைச்சர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், உட்பட கல்வி அதிகாரிகள், கிராம பெரியோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக குருக்கள்மடம் சிவநெறிக் கலாமன்றத்தின் தலைவர் வ.குணசேகரம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment