21 Mar 2015

மட்டில் 26 வயது இளைஞர் சடலமாக மீட்பு

SHARE
மட்டக்களப்பிலுள்ள பாலமீன் மடு பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இந்த இளைஞனின் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பலியானவர் மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சதீஸ்குமார் (26), என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: