காட்டுயானைகளிடமிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20)
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள பாலையடிவட்டை, வைக்கியல்ல, நவகிரிநகர், 38 ஆம் கிராமம், நெல்லிக்காடு, விளாந்தோட்டம், போன்ற கிராமங்களிலிருந்து 100 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன் வாயிற் கதவினை அடைத்து பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்த்தர்களை பிரதேச செயலகத்தினுள் செல்லவிடாது, எமது பிரதேசத்திலுள்ள காட்டு யானைகளை உடன் வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் கோசமிட்டனர்.
இவ்விடத்திற்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராச, ஆகியோரும் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் வாயிற் கதவினைத் திறந்து உள்ளே செல்ல முற்பட்ட வேளையில் பொதுமக்கள் அவர்களை விடாது தடுத்தனர்.
எமது கிராமத்தை அண்டியுள்ள பகுதிகளில் தற்போதும் நிலை கொண்டுள்ள காடடுயானைகளை வெளியேற்ற நடவடிக்கை எடும்போம் என எழுத்து மூலம் அறியத்தரும் பட்சத்தில் நாம் இவ்விடத்திலிருற்து கலைந்த செல்வோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மேற்படி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச செயலாளர் மாத்திரம் பிரதேச செயலகத்தினுள் செல்ல பொதுமக்களால் அனுமதி வழங்கட்டு வாயிற் கதவு திறந்து விடப்பட்டது.
பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளர் கடிதம் எழுதி மக்களிடம் கையளித்த பின்னே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைக்கப் பட்ட கோரிக்கைகளுக்கிணங்க 2 வார காலத்திற்குள் இப்பிரதேசத்தில் தங்கியிருக்கும் காட்டு யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
மேலும் இந்நடவடிக்கையின மேற்கொள்ள வன ஜீவராசிகள் திணைக்களம், இராணுவம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
மேலும் இப்பிரதேசத்திலுள்ள குடி நீர்ப் பிரச்சனைக்கு இன்றிலிருந்து தற்காலிகமாக போரதீவுப்பற்று பிரதேச சபையினூடாக வவுசர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காட்டு யானைகளினால் ஏற்பட்ட சேதத்திற்கு 1 மாத காலத்திற்குள தீர்வு கிட்டும் என உறுதியளிக்கின்றேன். என போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என் வில்வரெத்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈபட்;ட பொதுமக்ளினடம் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விடத்திற்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தாம் இங்குள்ள காட்டு யானைகளை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிகளித்துச் சென்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்திருப்பதும், வியாழக்கிழமை (19) இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment