6 Mar 2015

கிழக்கின் நல்லாட்சிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

SHARE
கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றை சிறப்பான முறையில் நிறுவி அனைத்து கட்சிசார்ந்த்தோருக்கும் இடமளித்து பதவிகள் வழங்கி கிழக்கில் நல்லாட்சியை உருவாக்கியுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதுக்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும், நல்லாட்சி அமைக்க உதவிகள் புரிந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நன்றியினைத்தெரிவித்துக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன. திருக்கோணமலை மாவட்ட காரியாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு சமூகமளித்திருந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், அரசாங்க அதிபர்கள்இ அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு மாகாணம் இங்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஸீர் அஹமட் இம்மூவின மக்களையும் சரி சமனாகப்பார்ப்பார் என்பதனை இங்கு அமைத்திருக்கும் ஆட்சியின் மூலம் காணக்கூடியதாக உள்ளது என்றார்.

முதலமைச்சர் உரை நிகழ்த்தும் போது குறிப்பிட்ட விடையங்களை கவனத்தில் எடுத்து அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க நான் தயாறாக இருக்கிறேன் என்றும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: