21 Mar 2015

தொற்று நேய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகள் சம்மந்தமான விழிப்புணர்வு.

SHARE
தொற்று நேய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகள் சம்மந்தமாகவும், தொற்றா நேய்கள் வராமல் தடுப்பது சம்மந்தமாகவும், பாடசலை ரீதியாக மாணவர்களை விழிப் பூட்டும் கருத்தரங் கொன்று வெள்ளிக் கிழமை (20) மட்.மண்டூர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக் கருத்தரங்கினை  மண்டூர் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் செ.விக்கினேஸ்வரராஜா, பழுகாமம் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் சி.சிவசுதன் ஆகியோர்; இணைந்து இதனை நடாத்தினர்.

இக் கருத்தரஙகின் போது மாணவர்கள், தெற்று நேய்க்கு எவ்வாறான சந்தர்ப்பங்களில், இலக்காகின்றனர் என்பது சம்மந்தமாகாவும்,  தொற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், மற்றும்  தொற்று நோய்களாக கொள்ளக் கூடிய  நேய்கள்,  எவை போன்ற சம்மந்தமாக மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுன.

அதேபோல் தெற்றா நோய்களில் இருந்து எதிர்காலத்தில் எவ்வாறு மாணவர்கள் தப்பித்துக் கொள்வது சம்மந்தமாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: