25 Mar 2015

மலையகத்திற்கும், வடக்கிற்கும், கிழக்கிற்குமாக ஒன்றிணைத்து ஒரு உறவுப்பாலமாக நான் இங்கு வந்துள்ளேன் - இராதாகிருஷ்ணன்.

SHARE
மலையகத்திற்கும், வடக்கிற்கும், கிழக்கிற்குமாக ஒன்றிணைத்து ஒரு உறவுப்பாலமாக நான் இங்கு வந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இந்த செயற்பாட்டை அனைவரும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களும், ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும்.
என இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் சிவநெறிக் கலாமன்றம் நடாத்திய அறநெறிக் கலை விழா திங்கட் கிழமை (23) மாலை 6 மணிக்கு மட்.குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மட்டபத்தில்  சிவநெறிக் கலாமன்றத்தின் தலைவர் வ.குணசேகரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

அறநெறி என்பது ஒவ்வொரு மத்திற்கும் நல்வழிப் படுத்துகின்ற வழியாக அமைந்துள்ளது. எந்த மதத்தையும் குறைத்து மத்திப்பிட முடியாது. ஒருவர் தமது மதத்தை மத்திப்பேதுபோல் பிற மதத்தையும் மத்திப்பதுதான் சிறந்த அறநெறியாகும். 

ஒரு சமயத்தினுடைய வளர்ச்சி ஒரு சமுத்தினுடைய வளர்ச்சியாகும். இதனால் பண்பாட்டு கலாசாரங்கள் வளர்கின்றன. இந்து கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியமாக இருக்கின்றன.

எனவே நாட்டிலுள்ள அனைவரும் சமாதானத்துடனும் சந்தோசத்துடனும் வாழவேண்டுமானால் அறநெறியைப் பின்பற்றி நடக்க வேண்டும்.  ஏழைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் நாம் அனைவரும் உதவ வேண்டும்.

கடந்தகாலத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து, தற்போது நிம்மதியாக வாழ்ந்து வந்துவரும் வடகிழக்கு மக்களுக்கு இவ்வாறான அறநெறிகள் இன்றியமையாததாகும்.

இலங்கை அசியலில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண அரசியலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்பேற்பால் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இதனைவிட தற்போது நாட்டில் தேசிய அரசாங்கம் ஏற்பட்டிருக்கினறது. அமையப் பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தின் மூலம். சிறுமான்மையாக வாழ்கின்ற மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் அவற்றினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக அமையப் பெற்றுள்ள தேசிய அரசாங்கம் சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற நிலமை வந்தால் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கக் கூடிய நிலை ஏற்படும். 

எனவே தற்போது மலையக அரசியலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய காலம் வந்துள்ளது.

இவற்றுக்காக வேண்டி மலையகத்திற்கும், வடக்கிற்கும், கிழக்கிற்குமாக ஒன்றிணைத்து ஒரு உறவுப்பாலமாக நான் இங்கு வந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இந்த செயற்பாட்டை அனைவரும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு அனைவரினதும்; ஒத்துழைப்புக்களும், ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: