அதிகாரிகள் மக்களின் கேள்விகளுக்கு கொடுக்கும் பதில் அவை மக்களை துன்புறுத்துவதாக அமையக் கூடாது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அதிகாரிக்ள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதற்காகவே அவர்களுக்கு வேதனம் வழங்கப்படுகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரிவுக்கான விவசாய ஆரம்பக் கூட்டம் சனிக்கிழமை (28) கோரகல்லிமடு ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கரந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் அவர் மெலும் கருத்து தெரிவிக்கையில்…..
இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள், தேவைகளுக்கு அமைவாக விவசாயிகளினால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு உரிய பதில் உரிய அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை, இதனை நான் நன்கு அவதானித்துக் கொண்டிருந்தேன் அந்த வகையில் அதிகாரிகளுக்கு மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
அரசியல் வாதிகளாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலம், நாம் மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள். மக்களின்றி நாம் இல்லை இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைக்கு உரிய பதிலினை உரிய முறையில் வழங்க வேண்டும்.
எமக்கு முன் வீற்றிருப்பவர்கள் வேறு யாருமில்லை ஏழை விவசாயிகள் இவர்களை சாதாரணமாக எடைபோட முடியாது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள்தான் அவர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு உண்டு. அதனை விடுத்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விடுதல் அல்லது உதாசீனம் செய்தல் சாதாரண விடயமாக கருத முடியாது.
எனவே விவசாயிகளின் கருத்தினை கேட்டு அவற்றிக்கு அமைவாக அதிகாரிகள் செயற்பட வேண்டும் விவசாயிகளின் மனதினை துன்புறுத்துவதாக கருத்துக்கள், பதில்கள் இனி ஒருபோதும் அமையக் கூடாது அவற்றினை இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment