சூழலில் பயன்பாடின்றி காணப்படும் பனம்விதைகளை பயன்படுத்தி சமூகத்தின்
பங்களிப்போடு பாடசாலைக்கு வருவாயை பெற்றுக் கொள்ளும் முகமாக புதிய
திட்டமொன்று அம்பாரை றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில்
முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையில் ஏற்படுகின்ற
நிதிப்பற்றாக்குறஇ மற்றும் பாடசாலையின் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளை
கருத்தில் கொண்டு அவற்றினை பூத்தி செய்வதற்குத் தேவையான நிதியினை
பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இத் திட்டத்தினைஇ அதிபர்
தலமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர். பழையமாணவர் சங்கத்தினர்
ஆகியோர் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.
இத்திட்டத்திற்கான மூலப்பொருளாக பனம்விதைகள் பயன்படுத்தப்பட்டது அதாவது சூழலில் பயன்பாடின்றி காணப்பட்ட பனம்விதைகள் பாடசாலை வகுப்புரீதியாக மாணவரர்களுடாக பெறப்பட்டது.
இவ்வாறு பெறப்பட்ட இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட பனம்விதைகள் வேள்விசன் அமைப்பின் உதவியுடன் நாற்று மேடையில் இடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
அதனடிப்படையில் பெறப்பட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பனங்கிழங்குள் அந்த சமூகத்தின் உதவியுடன் அவித்து தூய்மைப்படுத்தி காயவைத்து ஒடியலாக்கப்பட்டன. இவ் ஒடியல்கள் பனை அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வேறு பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இத் திட்டம் சம்மந்தமாக அதிபர் க.தியாகராசா கருத்துத் தெரிவிக்கையில்….
பாடசாலை சில வேலைத்திட்டங்களை முன்னேடுப்பதில் திணைக்கள நிதியினை எதிர்பார்க்க முடியாது எனவே அதன் அடிப்படையில் இப்பாடசாலை சமூகத்தின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததால் அதனை பயன்படுத்தி இத்திட்டத்தினை முன்னெடுத்தோம் அந்தவகையில் இத் திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேற்பட் நிதியினை எதுவித செலவுமின்றி பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம். பெறப்படும் இப் பணத்தின் மூலம் பாடசாலையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளோம் எனவும் றாணமடு இந்து மகா வித்தியாலயத்தின் அதிபர் க.தியாகராசா மேலும் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment