14 Mar 2015

4 மாதங்களின் பின் கிழக்கின் அமைச்சரவைக் கூட்டம்

SHARE
நான்கு மாதங்களின் பின்னர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை மாலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 

முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி, விவசாய அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகிய நால்வரும் பங்கேற்றிருந்தனர். 

சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

இதேவேளை மாகாண சபையின் அடுத்த பொதுச் சபை அமர்வு எதிர்வரும் 16ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பு பெரும்பான்மையை இழந்து அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டமையினால் கடந்த நான்கு மாதங்களாக அமைச்சரவைக் கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை கடந்த பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக நசீர் அஹமட் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி நிலவி வந்தது.

எனினும் கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்தே நேற்று கிழக்கின் புதிய அமைச்சரவை கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: