25 Mar 2015

இலங்கையில் 41 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்

SHARE
தற்போதைய காலகட்டத்தில் பாதுபாப்பு தரப்பைவிட பயப்படுவது ஊடகத்துறையினருக்குத்தான். பொதுவாக் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களுக்கு அதிகம் பயப்படுவார்கள். அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் ஓழல்களையெல்லாம் ஊர்ந்துபிடித்து வெளிக்கொணர்பவர்கள் ஊடகவியலாளர்கள்தான்.

சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் இந்நாட்டிலே செயற்படமுடியாமலிருந்தர்கள், அச்சுறுத்தப்பட்hர்கள், இவ்வாறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஊடகத்துறையில் ஈடுபடுகின்ற ஊடகவியலாளர்களபை; பாராட்டுகின்றேன்.

ஏன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் செவ்வாய்க் கிழமை (17) கொழும்பு தமிழ்ச் சங்க கேட்பொர் கூடத்தில் நாத்திய விருது வழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடரந்து தெரிவிக்கையில்….

பல தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியற் கட்சியினை உருவாக்கியவர்கள். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்தான். இதனை யாரும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 15 ஆம் திகதி றிச்சட் சொய்சா என்கின்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டது தொடக்கம், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி சசிமதன் என்கின்ற ஊடகவியலாளன் கொல்லப்பட்டது வரை 41 ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதிலும் பெரும்பாலாகக் கொல்பட்டவர்கள் தமிழர்கள். அதில் 2 ஊடகவியலாளர்கள் முஸ்லிங்கள், 5 ஊடகவியலாளர்கள் சிங்களவர்கள், 34 ஊடகவியலாளர்கள் தமிழர்கள். ஆவார்.

இந்த ஊடகக் கொலைகளெல்லம் இந்த நாட்டிலே நிறைவேற்றுத்துறை ஆட்சிக்காலத்திலேதான் நடந்தேறியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 2 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், முன்னாள் ஜனாதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலே 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலே 26 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.  இவ்வாறு ஊடகவியலாளர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்.

இதனைவிட ஊடகவியலாளர், எச்சரிக்கப்ட்டார்கள், கடத்தி விடப்படார்கள், இவற்றினைவிடபல ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இவ்வாறான துன்பியலான காலகட்டத்தில்தான் இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதனால் 50 இற்று மேற்பட்ட ஊடகவியலாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

1992 ஆம் ஆண்டு தொடக்கம். 2014 ஆம் ஆண்டு வரை 580 ஊடகவியலாளர் இந்த சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதில் இந்த சிறிய இலங்கைக்குள் 7 வீதமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.


இவ்வாறு ஊடகவியளாளர்களைக் கொன்றவர்களை இதுவரையில் கைது செய்யப்படவில்லை,

தற்போது இந்நாட்டில் ஆட்சிமாற்றம் என எல்லோரும் நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருகிகின்றோம். இந்த நிலையில் புலனாய்வாளர்கள், ஊடகவியலாளர்களைப் பின்தொடர்ந்த வண்ணமேயுள்ளார்கள்.

இலங்கை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்த இனம் என்பதால் நாம் கேட்கின்றோம் ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பாக ஆராயப்படல் வேண்டும். இது தொடர்பாக கிடப்பில் இருக்கும் அறிக்கைகள் வெளியிடப்படல் வேண்டும். குற்றவாழிகள் தண்டிக்கப்படல் வேண்டும். இதற்கு அரசியல்வாதிகளும், தேசிய சபைப் பிரதிநிதிகளும் பாடுபட வேண்டும்.

ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையானவர்கள். கடந்த காலத்தில் பாதிக்கபட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்ட்ட ஈடுகள் வழங்கப்படவில்லை, இவ்வாறான விடையங்களுகு இந்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் பாடுபட வேண்டும், அரசியல் வாதிகளாகிய நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம். எனத் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: