22 Mar 2015

போசாக்கின்மையை இல்லாதொழித்தல் செயற்றிட்டத்தின் ஆரம்பம்

SHARE
நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் போசாக்கின்மையை  இல்லாதொழித்து ஆரோக்கியமான சமூதாயத்தை கட்டியெழுப்பப்படுவதை மையமாகக் கொண்ட செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குச்சவெளி வைத்திய அதிகாரி காரியாலயத்தில்  சனிக் கிழமை (21) நடைபெற்றது.

 குச்சவெளி பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந் திட்டத்திற்கான ஆரம்ப  நிகழ்வில்   வைத்திய அதிகாரி ஜேசுநேசன் கலந்து சிறப்பித்தார்.

 இதன் போது கற்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு  உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன இத்திட்டத்திற்கமைய கற்பம் தரித்து நான்காவது மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பத்து மாதங்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந் திட்டத்தின் கீழ் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 850 க்கு மேற்பட்ட கற்பிணித்தாய்மார்கள் இதன் போது நன்மை பெறவுள்ளதாக பிரதேச செயலாளர்  எம்.தயாபரன் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: