திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு போக்குவரத்து பிரதி
அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக்கின் அழைப்புக்கு இனங்க கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கிழமை மாலை (11) கிண்ணியாவுக்கு முதலாவது
அபிவிருத்தி விஜயம் ஒன்றினை மேட்கொண்டதாக புதன் முதலமைச்சரின் ஊடக
இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.
இதன் போது அப்பிரதேசத்தில்
நீண்ட காலமாக இரனுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த இப்பகுதியினை மீட்டு
அவ்விடத்தில் பஸ் தரிப்பு நிலயம் ஒன்று அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேட்
கொள்ளப்படவுள்ளன.
நீண்ட காலமாக கிண்ணியா பிரதேச மக்கள் நிரந்தரமான
பஸ் தரிப்பு நிலயம் இல்லாத நிலமையை கருத்திற்கொண்டு மக்களின் தேவைகளை
பூர்த்தி செய்து இன மத பிரதேச வாதங்களை மறந்து அபிவிருத்தி பணிகளை
மேற்கொள்ளும் இவ்வேலைத்திட்டத்தை துரிதமாக செய்து முடிப்பதுக்கு
கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் சகல நடவடிக்கையும் எடுத்து
தருவதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment