25 Feb 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அமைச்சுக்களை தீர்மானிக்கும் - சுசில் பிரேம ஜெயந்த.

SHARE
கிழக்கு  மாகாண சபையில் யாரை அமைச்சராக நியமிப்பது எவ்வாறு ஆட்சி நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புபே  மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல.

என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தேசிய  அமைப்பாளருமான சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் செவ்வாய் கிழமை (24) கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் உள்ளிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவுடனான விஷேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…..

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்தே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா  முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி மூலம் ஆதரவு தெரிவித்தோம்.

அதைவிடுத்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்து அமைச்சுக்களை பங்கிடுவது ஜதார்த்தத்திற்கு முரணானதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். அவ்வாறு ஓர் நிலைதோன்றினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிநிதி முதலமைச்சராவதற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்க வேண்டியநிலை தோன்றும். என அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கைசாத்திடப் பட்டுள்ளதாகவும் இரண்டு அமைச்சும் ஓர் பிரதித் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்கப் படவுள்ளது. என செய்திகள் வெளிவரும் நிலையில் சுசில் பிரேம ஜயந்தவின் கருத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே  கிழக்கில் ஆட்சியைத் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளமை   குறிப்பிடப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: