ஜனாதிபதி தேர்தலில் 95வீதம் வாக்களித்த தமிழ்மக்களுக்கு நன்றிசெலுத்தும்
நன்றிகூர்பெருவிழாவொன்று நேற்று 21ஆம் திகதி காரைதீவு ஸ்ரீ நந்தவன
சதுக்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில்; ஜ.தே.கட்சியின் தேசியஅமைப்பாளரும் கிழக்குமாகாணசபை
உறுப்பினருமான தயாகமகே அரவது பாரியார் பிரதி நீர்ப்பாசன விவசாய அமைச்சர்
திருமதி அனோமா கமகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நன்றி
தெரிவிததனர்.
இதற்கான ஏற்பாட்டை ஜ.தே.கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் தம்பியப்பா சுரேஸ் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்வில் ஜ.தே.கட்சியின் கிழக்குமாகாணசபை உறுப்பினரான மஞ்சுள
பெர்ணாண்டோ பிரதி நீர்ப்பாசன விவசாய அமைச்சின் தமிழ்விவகார இணைப்பாளர்
வி.வினோகாந் தயாகமகேயின் அரசியல்விவகார இணைப்பாளர் பி.தேசப்பிரிய
உள்ளிட்டபல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment