இலங்கை
மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இன்று (09) நடைபெற்ற உலகக்கிண்ண
பயிற்சி போட்டியில் டக்வத் லுயிஸ் விதியின் படி தென்னாபிரிக்கா அணி 5
விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் போது மழை குறுக்கிட்டதால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 25 ஓவர்களில் 188 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 24.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் வீரர் மஹேலவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை அணி பங்குகொள்ளும் உலகக்கிண்ண தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment