9 Feb 2015

திருகோணமலையில் 1500 பேரிற்கு காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

SHARE
மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு  காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரம் வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த 1500 பேரிற்கு காணி ஆவணங்கள் இதன் போது வழங்கப்பட்டது. தாம் குடியிருக்கும் இடத்திற்கு சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருப்பது இன்றியைமையாயது என்று அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா இதன்போது குறிப்பிட்டார்.

காணி அமைச்சர் உரையாற்றுகையில், இன்றைய அரசாங்கம் சாதாரண மக்களது தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றது. ஆனால் முன்னர் இருந்த அரசாங்கம் சாதாரண மக்களை கவனத்திற்கொள்ளாது தனது குடும்பத்தினரிற்கும் தன வந்தர்களுக்கும் என தமக்கு அவசியமானவர்களுக்குமே காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியது.  இதன் காரணமாக சாதாரண மக்கள் பலர் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று எமது அரசாங்கம் உங்களது அடிப்படை தேவையை நிறைவேற்றியுள்ளது.

வழங்கிய இந்த காணி ஆவணங்களை பாதுகாப்பதுடன் நீங்கள் சிறப்பாக வாழ வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் அரசாங்க ஊழியர்களுக்கும் அவர்கள் வாழ்வதெற்கென காணித்துண்டொன்று வழங்கப்படும் என்றும் அதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் போது காணி அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதயில் 25000 காணி ஆவணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் காணி ஆவணங்களை பெற்றுக் கொள்ள முனையும்போது ஏதாவது கையூட்டுக்கள் கோரப்படுமாயின் அது தொடர்பில் தமக்கு அறியத்தருமாறும் காணி அமைச்சர் இதன் போது மக்களை கேட்டுக் கொண்டார்.
kaani valankal 1


kaani valankal

SHARE

Author: verified_user

0 Comments: