6 Feb 2015

மட்டக்களப்பு போதானா வைத்திய சாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபுணராக சிற்றம்பலம் சரவணன்

SHARE
மட்டக்களப்பு போதானா வைத்திய சாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபணராக சிற்றம்பலம் சரவவணன்  நியமிக்கப்பட்டு வியாழக் கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏற்கனவே இவ் வைத்தியசாலையில் கடமைபுரிந்த இவர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார்.

வழைகச்சேனை வைத்திய சாலையில் நான்கு வருடங்கள் கடமையாற்றிய பின்னர்  மட்டக்களப்பு போதனவைத்திய சாலைக்கு மீண்டும் இடமாற்றப்பட்டள்ளார்.

 மகப்பேற்றுத் வைத்தியத் துறையில் பதின்மூன்று வருடகால அனுபவத்தினைக் கொண்ட இவர்  கிழக்கு மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளதுடன் இதுவரையில் 4500 மகப்பேற்று சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற் கொண்டு வைத்தியத்தறையில் தடம் பதித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நவாலியை சேர்ந்த இவர் யாழ்பல்கலைக்கழகத்தில் வைத்திய துறை பட்டம் பெற்றதுடன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் வைத்திய கலாநிதி பட்டத்தினை பெற்று இங்கிலாந்தில் மகப்பேற்று சத்திர சிகிச்சைக்கான பட்டத்தினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: