12 Feb 2015

மட்டில் கன மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

 10.02.2015 காலை 08.30 முதல், 11.02.2015 காலை 05.30 வரையான காலப்பகுதியில், 28..6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

அடை மழை காரணமாக காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்ந்த இடங்கள் உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் வடிகான்கள் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது. கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

மீன்பிடி வள்ளங்களும் உபகரணங்களும் கரையிலிருந்து நீண்ட தூரத்திற்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இன்று காலை பாடசாலை செல்லும் மாணவர்களும் மழை காரணமாக பெரும் அவஸ்தைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: