12 Feb 2015

69 கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்

SHARE
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் கல்முனை நகரில் நடமாடிய, 69 மாடுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தலா இரண்டாயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன.

இம் மாடுகள் மீண்டும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் நடமாடுமாயின், அவை மீண்டும் பிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்படும் என குறித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்தார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்களுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதனால் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.(ad)
SHARE

Author: verified_user

0 Comments: