புதிய
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் வழங்கப்பட்ட உறுதிமொழியின்
அடிப்படையில் இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு
இறக்குமதியை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைவாக மட்டு மாவட்டத்தில் பால்
உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடனும் அரசாங்கத்தின் ஆலோசனையுடனும்
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இது தொடர்பில் பால் பண்ணையாளர்களை
ஊக்குவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியினால் கிழக்கு மாகாணத்தில் பசுப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11) புதன்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் உதவி பணிப்பாளர் எம்.எம்.தெஸீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் சிறுகடன் பிரிவு முகாமையாளர் அனுர திசாநாயக்கா, பிராந்திய முகாமையாளர் ஆ.ர்.எம்.சுகதபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பால் பண்ணையாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலைக்கு ஏற்ப அதிகளவில் பால் கறக்கக்கூடிய நல்லின பசுக்களை இனங்கண்டு அவற்றினை பெற்றுக்கொடுத்தல், உற்பத்திசெய்யப்படும் பாலினை கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் இங்கு கருத்துகள் பகிரப்பட்டன.
குறிப்பாக பால் பண்ணையாளர்கள் தங்களது உற்பத்திகளை விருத்திசெய்யும் வகையில் விசேட கடன் திட்டம் ஒன்றையும் இலங்கை வங்கியினால் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி ஊடாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் உதவி பணிப்பாளர் எம்.எம்.தெஸீம் தெரிவித்தார். இதன்மூலம் கடந்த காலத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பால் பண்ணையாளர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.(nl)

0 Comments:
Post a Comment