26 Feb 2015

நாங்கள் பிரிவினை கேட்க்கவில்லை - நடராசா

SHARE
நாங்கள்  சர்வதேத்திடம் பிரிவினையைக் கேட்க்கவில்லை சேர்ந்து வாழ்வதற்காக தற்போது நல்லாட்சியுடன் இணைந்திருக்கின்றோம் எங்களுக்கு இந்தநாட்டில் நீதியாக, நேர்மையாக, சுதந்திரமாக, வாழக்கூடிய தீர்வைத்தாருங்கள் என்றுதான் சர்வதேசத்திடம் கோருகின்றோமே தவிர பிரிவினையை அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராசா அவர்கள் தெரிவித்தார்.

கோட்டைக்கல்லாறு கிராமத்தின் அபிவித்தி தொடர்பாக புதன் கிழமை (25) மாலை கோட்டைக்கல்லாற்றில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

நாங்கள் தற்போது தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கின்றோம். எமது தமிழ் தலைவர்கள் தேசிய அரசங்கத்தின் முக்கியமான குழுக்களில்கூட அங்கத்துவம் பெற்று இருக்கின்றனர். இதெல்லாம் எமது மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிற்பந்தத்தில்தான் இடம்டிபறுகின்றது என்பதனை இந்த அரசும் சர்வதேசமும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக இந்நூறுநாள் வேலைத்திட்டத்திற்குள் எமது மக்களுக்கு செய்ய வேண்டிய பல்வேறு விடயங்களை செய்து முடிக்க வேண்டும், அது தடைப்படும் இடத்து எமது தமிழ் தலைமைகளுடன் நாம் பேசி இந்த அரசாங்கத்துடன் இருக்கின்ற நல்லிணக்கம் மறுபரிசீலனை செய்யப்படும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 11 பேர்களை எமது மக்கள் தேர்ந் தெடுத்துளளார்கள்; அந்த நேரத்தில் மகிந்த அரசின் அராஐகம், ஆட்கடத்தல் பேன்றவற்றை நாங்கள் அன்னிய தேசத்திற்கு அறிய வைக்க வேண்டும் என்றும், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னால்தான் எமது தமிழ் மக்கள் நிக்கின்றார்கள் என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறுவதற்காகவே நாங்கள் அன்று தேர்தலின்போது வாக்குக் கேட்டோம். அதற்கமைவாக எமது மக்கள் எங்களை வெற்றி பெறவைத்துள்ளார்கள். ஆனால் தமிழர்களின் கஸ்ரகாலத்தினால் கிழ்கில் கூடுதாலான ஆசனங்களை நாம் பெற்றிருந்தும் எங்களின் கைகளை விட்டு, விட்டு, ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் நழுவிச் சென்றுள்ளது.

சிறுபான்மை இனத்தவருக்கே இந்த மாகாண சபையின்  ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும். அந்த உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் மற்றய சிறுபான்மை இனமான முஸ்லிம் இனத்துடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு அப்போது இணங்கினோம். ஆனால் நாங்கள் முஸ்லிம் காங்கிரசை நாடியபோது ஏதே ஒரு வகையில் அவர்கள் மறுத்து விட்டார்கள் அவர்கள் அதற்காக பல காரணங்களை எம்மிடம் கூறினார்கள் இருந்தும் நாங்கள்  அன்று எதிர்க் கட்சியில் அமர்ந்தோம். அவ்வாறு இருந்த வேளையில் நாங்கள்  பல சாவால்களுக்கு எதிர்த்து போராடினோம் பின்னர் காலம் கனிந்தது.

மகிந்த ஆட்சி மறைந்தது! மலர்ந்தது மைத்திரியாட்சி! இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவி கிடைக்குமென்று எமது மக்கள் எண்ணியிருந்தனர் ஆனால் அதுவும், கிடைக்கவில்லை.  ஐனநாயக ஆட்சி, நல்லாட்சி என்றெல்லாம் எங்களால் வர்ணித்துக் கூறப்படுகின்ற தற்போதைய அரசு அந்த விடயத்தில் நிற்சயமாக பின் நின்றார்கள் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து.

ஐனாதிபதி மைத்திரிபால சிறசேனவோ, அல்லது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவோ எந்தவொரு சந்தர்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை, கூற விரும்பவில்லை, அதுதான் உண்மை நாங்கள் தற்போதைய அரசுக்கு, நல்ல சமிக்ஞையை காட்டினாலும்கூட அவர்கள் எங்களை வேறோர் கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என நாங்கள் கருதுகின்றோம்.

நாங்கள் அண்மையில் முஸ்லிம் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியிருந்தோம் ஆனால் அவர்கள் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்து முதலமைச்சர் பதவி எமக்கு கிடைக்கூடாது என்பதற்காக மகிந்தவை ஆதரித்த கட்சிகளின் ஆதரவை நாடி தற்போது கிழக்கு முதலமைச்சர் பதவியினைப் பெற்றிருக்கின்றனர். நாங்கள் அவர்கள் பெற்றுக் கொண்டதைப்பற்றி குறை கூறவில்லை ஆனால் தேசிய ரீதியாக சொல்லுகின்றார்கள்  நல்லிணக்கம், ஜனநாயகம், நீதி ,நேர்மை என்றெல்லாம் கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏன் முதலமைச்சர் பதவியினை எங்களுக்கு பெற்றுத் தருவதற்கு தயங்குகின்றனர். எனத்தெரியவில்லை. நாங்கள் எவ்வளவோ கீழிறங்கி எமது மக்களின் விடிவுக்காக, அபிலாசைகளை நிறைவு செய்வதற்காக, அபிவிருத்திக்காக நிறைவேற்றவே நாங்கள் அவ்வாறு கீழிறங்கி சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால் இதனை பலவீனமாக நினைத்தால் எதிர்காலத்தில் அவர்கள்தான் பலவீனப்பட வேண்டி ஏற்படும் என்பதனை அறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஜனநாயக ரீதியாகவே  செல்வோம் அரசன் நுறுநாள் வேலைத் திட்டத்தில் பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம் அது மாத்திரமின்றி இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றது அத்துடன் தக்கநேரத்தில் nஐனிவா அறிக்கை வெளிவர இருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: