15 Feb 2015

இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

SHARE
உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அணி 76 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இன்று ‘பி’ பிரிவில் உள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் தோனி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி களமிறங்கிய அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கோலி மற்றும் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

இந்திய அணி தரப்பில் கோலி 107 ஓட்டங்களையும், ரெய்னா 74 ஓட்டங்களையும், தவான் 73 ஓட்டங்களையும் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைக் குவித்தது. இதன் பின்னர் வெற்றிக்கு 301 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட ஆரம்பித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெசாத்தும், யூனிஸ்கானும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் பந்துகளை சந்திக்க சிரமப்பட்டனர்.

பாகிஸ்தான் 47 ஓவரில் 224 ஓட்டங்களை எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதம் அடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் 6 முறை வென்று தோல்வியை சந்திக்காத இந்தியா என்ற வரலாற்று சாதனையை தக்க வைத்துக்கொண்டது.
SHARE

Author: verified_user

0 Comments: