சீன நாட்டு
அதிபர் ஜி ஜின்பிங் தனது முதல் அமெரிக்கா பயணத்தை இவ்வருட பிற்பகுதியில்
மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ஜப்பான் அதிபர் ஷினோஷ் அபே ஆகியோருக்கு அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சூசன் ரைஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் மாநாடு கடந்த நவம்பர் மாதம் சீனாவில் இடம்பெற்ற போது சீன ஜனாதிபதி ஜிங்பிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கடைசியாக சந்தித்துள்ளார். அதற்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட சீன அதிபர் கடந்த 2013 ஜூன் மாதம் ஒபாமைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment