18 Feb 2015

மட்டு நகரில் இளம் விவசாய பண்ணையாளர்களுக்கு உழவு இயந்திரங்கள் கையளிப்பு

SHARE
இளைஞர் விவசாயப் பண்ணைத்திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு  இளைய விவசாயப் பண்ணையாளர்களுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும் கிரிமிநாசினி தெளி கருவியும் வழங்கி வைக்கப்பட்டது.
திங்கட்கிழமை (16) மாலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸால் இவ் இயந்திரங்களும் கருவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

தன்னாமுனையைச் சேரந்த வி.தயாபரன், திமிலைதீவைச் சேர்ந்த செல்வராசா குமார் ஆகியோருக்கே இந்த இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

இளைஞர்களது பண்ணைகளை மேம்படுத்துவதும் அவர்களது வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக ஏனைய இளைஞர்களுக்கு முன்மாரிதியானவர்களாக மாற்றி இளைஞர்களை பிரதேசத்தின் பிரதான உற்பத்தித்துறையாளர்களாக விவசாயத்துறையில் ஈடுபடச் செய்வதும் ஊக்கப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாவட்டத்தின் விவசாயத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தியையும் அதிகரித்து விவசாயப்பண்ணைகளை அதிகரிப்பதும் என்ற நோக்கத்தில் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் விவசாயப்பண்ணை திட்டம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றமையானது நவீன தொழில்நுட்பங்களுக்குள் இளைஞர்களைப் பயிற்றுவிப்தே நோக்கமாகும் என்று மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால் தெரிவித்தார்.
vehicle 3

Vehivle 1
SHARE

Author: verified_user

0 Comments: