18 Feb 2015

மட்டு:மண்ணுக்கு சேவையாற்றிய இரண்டு ஓய்வு பெற்ற வைத்தியர்களுக்குப் பாராட்டு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியிலும், மகத்தான வைத்திய சேவையாற்றி தற்போது ஒய்வு பெற்றிருக்கும் வைத்தியர் வி.விவேகானந்தராஜா, மற்றும், வைத்தியர் எஸ்.தங்கவடிவேல் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்தி பாடாரட்டுமடல் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கசர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (15) இந்நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 40 வருட காலம் மட்டக்களப்பு மாவட்ட மண்ணுக்கு மேற்படி இரண்டு வைத்தியர்களும், வைத்திய சேவை புரிந்து தடம் பதித்துள்ளார்கள், இவர்களை பாரட்டுவதில் எமது வைத்திய சமூகம் மட்டுமின்றி மாவட்டமக்களும் உளமகிழ்கின்றனர் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கசர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா, மற்றும், வைத்திய அதிகாரிகள், கல்வியியலாளர்கள், சமயத் தலைவர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: