20 Feb 2015

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் வைத்தியசாலையில்

SHARE
வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்தவர்களில் நால்வர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல்10.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாசிவன் தீவிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த படகே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர்  தெரிவிக்கின்றார்.

நான்கு பேர் பயணிக்கக் கூடிய படகில் 10 பேர் பயணித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: