கடந்த 2013/2014 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய
ரீதியிலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் சாதனை படைத்த வீரர்களை
கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இந்த வர்ணக்
கௌரவிப்பு விழா கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர்
என்.மதிவண்னண் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை
அமைச்சின் உதவிச் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் கலந்து கொண்டு
சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள்,
பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2013/2014 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய, மாகாண
மற்றும் மாவட்ட ரீதியில் சாதனை படைத்து தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு கிண்ணம், விளையாட்டு
சீருடைகள், உபகரணங்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களையும் நிகழ்வின் பிரதம
அதிதி கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர்
பிர்னாஸ் இஸ்மாயிலினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம், 12
ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வீரர்களை உற்சாகப்படுத்தி தேசிய மாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில்
சாதனை படைக்கக் காரண கருத்தாக இருந்த விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும்
பயிற்றுவிப்பாளர்களையும் இதன்போது கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment