மைத்திரி யுகத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்குள் சாய்ந்தமருதில்
மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சம்பந்தமான கருத்தறியும்
கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி
மற்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான றவூப் ஹக்கீம் கலந்து
கொண்டார்.
குறித்தநிகழ்வில் சாய்ந்தமருதில் இருக்கும் பலதுறைகளிலும் அனுபவமும்
நிபுணதத்துவமும் உள்ள பலர் கலந்து கொண்டதுடன் ஊரின் அபிவிருத்தியை இலக்காக
கொண்டு குழுவாக செயற்பட்டு அபிவிருத்தியின் உண்மையான பயனை அடைய உழைப்பது என
உறுதிபூண்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களிடம் சாய்ந்தமருது சார்ந்த
திட்டங்களை முன்வைத்ததுடன் அதற்காக உழைப்பதாகவும் உறுதியளித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கான
திட்டங்களை தான் உடனடியாக நிறைவேற்றித்தருவதாகவும் விசேடமாக தோணாவை
அபிவிருத்தி செய்வதையும் வொலிவேரியன் கிராமத்துக்கு அருகில் இருக்கும்
காணிகளை மக்கள் குடியிருப்பு பிரதேசங்களாக மாற்றி கல்முனை நகர
அபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கி செயற்பட்டவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் இனங்காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை
நிறைவேற்றிக்கொள்ள தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும்
அதற்கு இங்கிருக்கும் புத்திஜீவிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment