3 Jan 2015

ஓன்றிணைந்த Orient Finance PLC, Bartleet Finance PLC, ஆகிய நிதிக் கம்பனிகள் மேற்கொண்ட வெள்ள நிவாரணப்பணி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஓன்றிணைந்த Orient Finance PLC ,Bartleet Finance PLCஆகிய நிதிக் கம்பனிகள்; ஒவ்வொன்றும் தலா 1000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களைக் கொண்ட பொதிகளை நிவாரணமாக வழங்கின.

இவ் நிவாரணப் பொருட்கள் முறையே உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும், மக்களிற்கும் மற்றும் கல்லடி முகத்துவாரம் முதியோர் அமைப்பின் அங்கத்தவர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டன.

இவ் நிவாரணப் பணியானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் வழிநடத்தலில் மேற்படி மக்களிற்கு வழங்கப்பட்டதாகவும், இது எமது கம்பனி மேற்கொள்ளும் சமூகப்பணிகளில் ஒன்றாகும் எனவும்   இவ்விரு நிதிக்கம்பனிகளினதும் மட்டக்களப்பு  முகாமையாளரான எஸ்.இ.முகுந்தன் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: