3 Jan 2015

ஆனைகட்டியவெளி பலாச் சோலை பிராதான வீதி சிரமதானப் பணி

SHARE
 (யுவாமி)
"ஒன்று  பட்டால்   உண்டு வாழ்வு" அதற்கமைவாக அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் மட்டக்களப்பு அம்பாறை போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயந்ததோடு போக்குவரத்து பாதைகளும் செதமடைந்தது. அதற்கமைவாக மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட ஆணைகட்டியவெளி மற்றும் பலாச்சோலை பிரதான வீதி சமிளையடிவட்டi வீதிகள் இன்று 02ம் திகதி சனிக்கிழமை ஆனைகட்டியவெளி கிராம உத்தியோகத்தர் ம.சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இச்சிரமதானப் பணியில் அப்பிரதேச மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர். இன்றைய சிரமதானப் பணியானது தரைவழியாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவியாக அமைந்தது. இதற்கு போரதீவுப் பற்று பிரதேச சபையின் மூன்று உழவு இயந்திரங்களையும் லோடர்களையும் வழங்கி உதவிகளை புரிந்துள்ளனர்.

இன்றைய தினம் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்களுக்கு அமெரிக்கன் மிஷன் நிறுவனத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.















SHARE

Author: verified_user

0 Comments: