18 Jan 2015

நான் ஜனாதிபதியின் மகனானது குற்றமா? நாமல் ராஜபக்ச கேள்வி

SHARE

நான் ஒரு ஜனாதிபதியின் மகனானது குற்றமா என நாமல் ராஜபக்ச எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையிலான நெருக்கமே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்;தியாவின் என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவி;த்துள்ளார்.

எனது குடும்பத்திற்குள் காணப்பட்ட பிணைப்பே,யுத்தம் முடிவிற்கு வந்தமைக்கு காரணம்,எந்த தலைவருக்கும் தான் நம்ப கூடிய பாதுகாப்பு செயலாளர்அவசியம்,

எனது தந்தையால் தனிப்பட்ட ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுடன் இணைந்து உறுதியான முடிவுகi எடுக்க முடிந்தது,ஆனால் அவர் நம்பக்கூடிய ஒருவர் அவசியம்.

நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர்,நான் ஜனாதிபதியின் மகனானது குற்றமா எனகேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவளை ஜனவரி 9 ம்திகதி அலரிமாளிகையில் சதிமுயற்சியொன்று குறித்து ஆராயப்பட்டது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் பலர் கலந்துரையாடுவதற்கு வந்திருந்தனர், தேர்தலுக்கு பின்னர் அது வழமையான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: