7 Jan 2015

உத்தியோகப்பூர்வ கண்காணிப்புக் குழு நேற்று மட்டு விஜயம்

SHARE
உத்தியோகபூர்வ சர்வதேச கண்காணிப்பாளர் குழு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று (06) செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தது.
மட்டக்களப்புக்கு வருகை தந்த நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளைச் சேந்த பிரதிநிதிகள் குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்து மக்களின் வாக்களிப்பு, தேர்தல் விடயங்கள், தேர்தல் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பிலும் கலந்து கொண்டனர்.மேலும்- தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்திற்கு விஜயம் செய்து தேர்தல் முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள், குறித்தும் கலந்துரையாடினார்.  மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இக்குழுவில் ஆசியத் தேர்தல் அமைப்பைச் செர்ந்த நேபளா நாட்டின் சூரியப் பிரசாத் ஆர்யா, மாலைதீவின் அகமட் முவாஸ் ஆகியோர் அடங்கியுள்ளனர்.இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 முறைப்பாடுகள் மாவட்ட முறைப்பாட்டு அலுவலகத்திற்குக்கிடைத்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்குழு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: