முகத்தை
மறைத்துக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு
எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மேலதிக தேர்தல் ஆணையாளர்
எம்.எம்.மொஹமட் விளக்கமளித்தார்.
இதன்படி, முகத்தை மறைத்துக்கொண்டுள்ள
முஸ்லிம் பெண்கள் வாக்குச்சாவடிகளில் கடமையிலுள்ள பெண் தேர்தல்
அதிகாரிகளிடம் தமது தேசிய அடையாள அட்டையுடன் தமது முகத்தைக்காட்டிய பின்னரே
அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்படுமென மேலதிக
தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
எனவே இத்தகைய அபாயா சீருடையில் செல்லும் முஸ்லிம் பெண்கள் இந்த தேர்தல் சட்டங்களுக்கிணங்க நடந்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொள்கிறார்.
இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் போது ஒவ்வொருவரும் தமது ஆளடையாளத்தை உறுதி ப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாப்வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் போது ,தேசிய அடையாள அட்டை ,செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் ,ஓய்வூதிய அடையாள அட்டை ,முதியோர் அடையாள அட்டை ,ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலி க அடையாள அட்டை இவற்றுள் ஏதாவதொன்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லாதவருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment