ஜனாதிபதி
தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச ஊழியர்களுக்கு நான்கு மணிநேர விடுமுறை
வழங்கப்படல் அவசியம் என தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச பிரிவின் விசேட விடுமுறை தொடர்பான
நிறுவன சட்டத்தின் XII அதிகாரத்தின் 12.3 பகுதியில்
குறிப்பிடபட்டுள்ளமைக்கமைய இவ்விடுமுறை வழங்கப்படுகிறது.
அதற்கமைய பணியிடத்திற்கு 40 கிலோ மீற்றர்
தொலைவில் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் வசிப்போருக்கு சம்பளத்துடன்
கூடிய அரை நாள் விடுமுறையும் 100- 150 கிலோ மீற்றர் தொலைவில் வசிப்போருக்கு
சம்பளத்துடன் கூடிய ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீற்றருக்கு
அதிகமான தொலைவில் வசிப்போருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையும்
வழங்கப்படவேண்டும்.
இது தவிர நாட்டின் சில பிரதேசங்களில்
வசிப்போர் சென்று வாக்களித்து விட்டு மீண்டும் திரும்ப 3 நாட்கள் தேவையாக
இருக்கும் பட்சத்தில் வழங்கப்படவேண்டும் என்றும் அவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் செல்லுபடியாகும்.(nl)
0 Comments:
Post a Comment