பரிசுத்த
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில்
ஈடுபடவுள்ள பொலிஸ் அதிகாரிகளின் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை விடுமுறை
வழங்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு கொழும்பில் மூடப்படவுள்ள
பாடசாலைகளின் விபரங்கள் வருமாறு:கொழும்பு தெற்கு:- கறுவாத்தோட்டம் பொலிஸ்
பிரிவு- றோயல் கல்லூரி- சிரிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம்- தர்ஸ்டன்
கல்லூரி- டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி- கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவு மஹாநாம
கல்லூரி- புனித அந்தோனியார் மகளீர் கல்லூரி- புனித மரியாள் கல்லூரி-
நாராஹேன்பிட்ட பொலிஸ் பிரிவு- இஸிபத்தன கல்லூரி- பொரள்ள பொலிஸ் பிரிவு
கன்னங்கர வித்தியாலயம்-பண்டாரநாயக்க வித்தியாலயம்- சுசமய வர்தன
வித்தியாலயம்- சங்கமித்த பாலிக்கா வித்தியாலயம்.
கொழும்பு வடக்கு:- கொடஹேன பொலிஸ்
பிரிவு,கொடஹேர குமார வித்தியாலயம், குணாநன்த வித்தியாலயம், ஜனாதிபதி
கல்லூரி- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு- புனித ஜோசப் ஆண்கள் பாடசாலை- விஜயபா
வித்தியாலயம்- புனித அந்தோனியார் சிங்கள பாடசாலை- புனித அந்தோனி தமிழ்
பாடசாலை- புளூமெண்டல் சிங்கள வித்தியாலயம்- அல்- அஸார் வித்தியாலயம்-
புளுமெண்டல் தமிழ் பாடசாலை- ஜயந்தி வித்தியாலயம்- தெமடகொட பொலிஸ் பிரிவு
ஹேமமாலி பாலிக்கா வித்தியாலயம்- ஞானவிமலாராம விகாரை.
கொழும்பு மத்தி:- மாளிகாவத்த பொலிஸ்
பிரிவு பாரோன் ஜயதிலக்க வித்தியாலயம், ராஜசிங்க வித்தியாலயம்- மருதானை
பொலிஸ் பிரிவு- ஆனந்த வித்தியாலயம்- அஷோக வித்தியாலயம்- மகாபோதி
வித்தியாலயம்- விகார மாதேவி பாலிக்க வித்தியாலயம்- சங்கராஜ வித்தியாலயம்-
ஆனந்த பாலிக்கா வித்தியாலயம்- கோதமீ பாலிக்கா வித்தியாலயம்- க்ளிப்டன்
பாலிக்கா வித்தியாலம்- கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவு- புனித ஜெபமாலை சிங்கள
வித்தியாலயம்- புனித ஜெபமாலை தமிழ் பாடசாலை- சாரிபுத்த வித்தியாலயம்-
டி.பி.ஜாயா வித்தியாலயம்- அல் இக்பால்.
வித்தியாலயம்.11 மற்றும் 12ஆம் திகதிகள்
வார இறுதி நாட்கள் என்ற படியாலும் 15ஆம் திகதி தைப்பொங்கள் தினமென்பதாலும்
13 மற்றும் 14ஆம் திகதிகளில் மட்டுமே பாடசாலை நடைபெற மாட்டாது.
இப்பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் பதினாறாம் திகதி மீண்டும் கல்வி
நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.(nl)
0 Comments:
Post a Comment