20 Jan 2015

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தங்களது வேலைகளை திணிக்கின்றனர்.

SHARE
(பழுவூரான்)

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தங்களது வேலைகளை கொடுப்பது வழக்கமாகியுள்ளது. இது குறித்து அப்பாடசாலையின் அதிபர் மற்றும் கல்வி சார் அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும்.
 
இவ் ஆசிரியர்கள் விடுமுறை காலத்தில் செய்யவேண்டிய வேலைகளை தற்போது மாணவர்களிடம் கொடுத்து செய்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பாடக்குறிப்பேடு மற்றும் வினாத்தாள்கள் திருத்தும் பணி போன்ற  செயற்பாடுகளும் தங்களிடம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு முற்றாக பாதிப்புக்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: