நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை மக்கள் என்று மில்லாத வகையில் உணர்வு ப+ர்வமான முறையிலும், அமைதியான முறையிலும் வாக்களித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 365163 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு, 97779 வாக்குகளும், வெற்றிலை சின்னத்தில் பேட்டியிட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு 21473 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த தேர்தல் தொகுதியில் 172497 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர், ஆனாலும் 121637 வாக்குகள் பதிவு செய்யப் பட்டிருந்தன இதில் 1106 வாக்குகள் நிராகரிக்கப் பட்டுள்ளன 122743 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.
கல்குடா தேர்தல் தொகுதியில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு 60342 வாக்குக்களும், வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸவுக்கு 10337 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த தேர்தல் தொகுதியில் 105055 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 72822 வாக்குகள் அளிக்கப் பட்டிருந்தனர், இதில் 747 வாக்குகள் நிராகரிக்கப் பட்டிருந்தது 72075 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 44485 வாக்குகளையும். வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட 8216 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 87611 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இத்தொகுதியில் 55039 பேர் வாக்களித்திருந்த நிலையில் 627 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, 54412 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் தபால் மூல அளிக்கப்பட்ட வாக்களிப்பில் மைத்திரி பாலசிறிசேன 6816, வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ 1605 வாக்குகளையும் பெற்றிருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்தாகும்;.
0 Comments:
Post a Comment