9 Jan 2015

மட்டக்களப்பில் போக்குவரத்துக்கள் குறைவு

SHARE
ஜனாதிபதித் தேத்தல் முடிந்துள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) காலையிலிருந்து பிரதான வீதிகளில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதனைக் காணக் கூடியதாகவுள்ள,

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவும். பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளதையும், பஸ் போக்குவரத்துக்கள் குறைவாகவும் காணப்படுவதை அவதானிக் முடிகின்றது.

இது இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளதை அறிந்த ஆதரவாளர்கள் , களுவாஞ்சிகுடி, கழுதாவளை, தேற்றாத்தீவு, பட்டிருப்பு, பேன்ற பல இடங்களில் பட்டாசி கொழுத்தி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: