16 Jan 2015

பிலிப்பைன்ஸில் பரிசுத்த பாப்பரசர்

SHARE
இலங்கையில் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் மனிலா நோக்கி சென்ற பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் தற்போது பிலிப்பைன்ஸ் மக்களுக்கான பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வகையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், ஊழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அந்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக காணப்படும் ஊழல் மோசடி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவரும் படி பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு தலைவர்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

நேற்று (15) வியாழக்கிழமை பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு, இன்று (16) வெள்ளிக்கிழமை  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோனா அக்யூனோ (Benigno Aquino) வின் தலைமையில் பாராளுமன்றத்தில் வரவேற்பு நிகழ்வு  இடம்பெற்றிருந்தது.

இதன்போது உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ், ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்து புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என  அந்நாட்டுத் தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாப்பரசர் பிரான்சிஸினால் தற்போது திருப்பலி ஆராதனை முன்னெடுக்கப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேபோல் நேற்று வியாழக்கிழமை பாப்பரசர் பிரான்சிஸ் பிலிப்பைன்ஸை வந்தடைந்த போதும் அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பாப்பரசரால் முன்னெடுக்கப்படவுள்ள திறந்த அரங்குத் திருப்பலி ஆராதனையில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: