13 Jan 2015

‍‍கிழக்கு மாகாண சபை வரவு செலவுத் திட்டம் புதிய முதலமைச்சரால் சமர்பிப்பு

SHARE
கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மாக்கள் சுதந்திர முன்னணியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையிலேயே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் சபை கூடியபோது கோரமின்மையால் சபை அமர்வு இன்று முற்பகல் 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு - குறித்த நேரத்திற்கு சபை மீண்டும் கூடியது.

இதன்போது இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி கோரிக்கை விடுத்தார்.

அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் வழி மொழிந்ததுடன் குறித்த வரவு செலவுத் திட்டம் புதிய முதலமைச்சரால் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சபையை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: